சினிமா உலகில் பட வாய்ப்பு நடிகைகளுக்கு எப்பொழுதுமே கிடைக்கும் அதற்கு காரணம் அவர்கள் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் அதே சமயம் அவர்களுக்கு சம்பளமும் அதிகம் கிடையாது இதனால் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்பு சினிமா உலகில் கொட்டி கிடக்கிறது.
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி சினிமா உலகில் ஆட்சி செய்வார்கள்.. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் சமந்தா, நயன்தாரா, பூஜா ஹெக்டே, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் அதிகம் சம்பளம் வாங்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இவர்களுக்குள்ளேயே ஒரு போட்டி இருக்கிறது.
அதாவது ஒவ்வொரு படமும் வெற்றி பெரும் பொழுது கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது ஒரு படத்திற்கு நான்கு கோடி கிட்டத்தட்ட சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே நடிகை நயன்தாராவும் தற்பொழுது 5 கோடியிலிருந்து 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.
இப்பொழுது கூட இவர் பல்வேறு புதிய படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் நடிகை நயன்தாரா கோல்ட், கனெக்ட், ஜவான் மற்றும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார் இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்பொழுது எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் நயன்தார அன்னபூரணி திரைப்படத்திற்காக 35 நாள் கால் சீட் கொடுத்துள்ளார் அதற்காக மட்டுமே 10 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது அன்னபூரணி என்கின்ற டைட்டில் ஏற்கனவே வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதால் அந்த டைட்டிலை மாற்றவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.