தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன அந்த வகையில் சிம்புவின் மாநாடு திரைப்படம் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது இது மக்களை கவருமா என்ற அச்சம் சற்றுக் இருந்திருக்கும் ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபு.
படத்தை சரியாக நகர்த்தி அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி படத்தை எடுத்து இருந்ததால் இந்த திரைப்படம் தற்போது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது மேலும் இதில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்துள்ளனர்.
அதற்கு முக்கிய காரணம் அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் எனவும் பேசப்படுகிறது. ஆம் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் கைகோர்த்து எஸ் ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி என ஒவ்வொருவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்.
அதிலும் குறிப்பாக சிம்பு வேற லெவல் ஆக்டிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறந்த படத்தை கொடுத்து தற்போது தனது ரசிகர்களை மீட்டு எடுத்து உள்ளார் நடிகர் சிம்புக்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கள் படம். இதுவரை வெளியாகிய பதினொரு நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் மாநாடு திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன.
மேலும் நடிகர் சிம்புவின் படங்களில் இதுதான் அதிகம் வசூல் செய்த படமாக இருக்கிறது மேலும் 100 கோடி பட்ஜெட்டை தொட்டுவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது படக்குழுவின் கருத்தாக இருக்கிறது.