சினிமா உலகில் காமெடியன்னாக அறிமுகமான பலரும் இப்பொழுது ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் அந்த வகையில் சூரி, யோகி பாபு போன்றவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானமும் ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் காமெடியன்னாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த புது அவதாரம் எடுத்தார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அதன் பிறகு ஹீரோவாக இவர் தொடர்ந்து தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, பிஸ்கோத் போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்தன இப்பொழுது கூட நடிகர் சந்தானம் kick என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென காமெடியன் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது
காரணம் சந்தானம் சமீபத்தில் நடிக்கும் படங்கள் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை பெறாததால் வேறு வழி இல்லாமல் காமெடியன்னாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதுவும் எடுத்தவுடனே ஏ கே 62 படத்தில் காமெடியன்னாக இவர் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் காமெடியன்னாக இந்த படத்தில் நடிக்க அவர் 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என தகவல்கள் கசிக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 17ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.