பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் “ஜிபி முத்து” சம்பாதித்த பணம் எவ்வளவு தெரியுமா? 14 நாட்களில் மட்டுமே இவ்வளவா.?

bigboss
bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி டிஆர்பி யில் முதலிடத்தை பிடிக்க  பல ரியாலிட்டி சீரியல் – ஷோக்களை வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன அந்த வகையில் அண்மையில் கூட ராஜூ வீட்ல பார்ட்டி நிகழ்ச்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதே நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சி  பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது பிக்பாஸ் 5 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் ஆறாவது சீசனையும் வெற்றிகரமாக தொடங்கியது இந்த சீசனில் மொத்தம் 20 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து ஓடினர். அந்த வகையில் அமுதவாணன், ரட்சிதா, ஜி பி முத்து ஆகியோர்கள் இடம் பிடித்திருந்தனர் இவர்கள் மூவரும் பைனல் வரை செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது ஆனால் திடீரென ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து  விலகி உள்ளார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இதுவரை இருந்த வரைக்கும் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அவர் பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 14 நாள்கள் பயணித்துள்ளார் அவருக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 18000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் குறைந்தபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு வாங்கினால் அவர் 14 நாட்களுக்கு மட்டும்..

இரண்டு லட்சத்தி பத்தாயிரம் வரை சம்பாதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. குறைந்த நாட்கள் பயணித்து இருந்தாலும் இவ்வளவு சம்பாதித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஜி பி முத்துக்கு  இறுதிவரை செல்லும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவற விட்டுள்ளது தற்பொழுது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது..