அண்ணாத்த படம் சென்னை சிட்டியில் மட்டும் எவ்வளவு தொகை அள்ளியது தெரியுமா.? முதலிடத்தில் எந்த படம்.

actors
actors

சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்கள் வந்தால் ரசிகர்கள் அதை மிகப் பெரிய திருவிழா போல கோலாகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகரின் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது எவ்வளவு நாள் ஓடியது என எல்லாத்தையும் தெரிந்து வைத்து கொள்ள ஆசைப்படுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் முதல் நாளில் எதிர்பாராத அளவுக்கு வசூல் வேட்டையை நடத்தி புதிய சாதனை படைத்தது போதாத குறைக்கு இரண்டாவது நாளில் 100 கோடியை அள்ளிய பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

அண்ணாத்த கலவையான விமர்சனம் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் கோடான கோடி என்பதால் இந்த திரைப்படம் இன்னும் வருகின்ற நாட்களிலேயே மிகப்பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல விமர்சனங்களையும் தாண்டி அளித்து வருவதாக படக்குழுவினர் தற்போது சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த படம் பல்வேறு இடங்களில் புதிய சாதனையை நிகழ்த்தி இருந்தாலும் ஒரு சில இடத்தில் தவற விட்டுள்ளது அந்த வகையில் சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலில் அண்ணாத்த திரைப்படம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளதாம் சென்னையில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் மட்டும்.

1. சர்க்கார் 2.41 கோடியையும், அடுத்த இடத்தில் ரஜினியின் 2.0 – 2.40 கோடியும், தர்பார் மூன்றாவது இடத்தில் பிகில், ஆறாவது இடத்தில் அண்ணாத்த இடத்தை பிடித்து உள்ளது சென்னை சிட்டி பொறுத்தவரை அண்ணாத்த திரைப்படம் 1.71 கோடி மட்டுமே கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.