Leo : 2023 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் துணிவு, வாரிசு படங்கள் ஆரம்பத்தில் வெற்றியை பார்த்தது அதனை தொடர்ந்து ஜெயிலர், ஜவான், மார்க் ஆண்டனி படங்களை தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.
விஜய் உடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர்மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் வாரம் ஃபுல்லா ஹவுஸ் ஃபுல்லாக இந்த படம் ஓடியது. அதனால் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.
கரு கரு கருப்பாயி.. கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்
இதுவரை மட்டுமே வசூலில் சுமார் 500 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் லியோ படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சந்தோஷம் அடைந்த லியோ டீம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி சக்சஸ் மீட் சென்னையில் உள்ள நேருவில் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலரும் கலந்துகொண்டு அசத்தினர். லியோ படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இனி நான் போற பாதை சிங்க பாதை.. விக்ரம் நடிப்பில் வெளிவர போகும் 5 படங்கள்.!
அதன்படி விஜய், திரிஷாவை தொடர்ந்து லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க மேத்யூ தாமஸ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்கையில் மேத்யூ தாமஸ் லியோ படத்தில் நடிக்க சுமார் 60 அல்லது 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.