சோசியல் மீடியாவில் தற்போது மகாலட்சுமி ரவீந்தர் இவர்களுடைய திருமணம் பேசும் பொருளாக இருந்து வருகிறது மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ் புக் என எங்கு பார்த்தாலும் இவர்கள் இவர்களுடைய மீம்ஸ் மற்றும் இன்டர்வியூ வீடியோக்கள் தான் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமானவர்கள்.
விஜேவாக பணியாற்ற தொடங்கி தற்பொழுது சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் கதாநாயகியாகவும், வல்லியாகவும் நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.மேலும் இவர் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழ் சினிமாவில் பத்திருக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் யூடியூப் விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நட்புனா என்னானு தெரியும்,முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் இவர் தான்.இவர்கள் இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் இந்நிலையில் தற்பொழுது ரவீந்தரின் உருவ அமைப்பு மற்றும் மகாலட்சுமி மற்றும் ஈஸ்வரன் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் ஒன்று சேர்த்து இந்த ஜோடிகளை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் தங்களை விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் இன்ஸ்டாகிராமின் மூலம் பதிலடி கொடுத்தார்கள் இப்படிப்பட்ட நிலைகள் மகாலட்சுமி பணத்திற்காக மட்டும்தான் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பலரால் கூறப்பட்டு வந்தது. இதனை இந்த ஜோடிகள் எதிர்த்து வந்தார்கள் மேலும் இவர்களுக்கு பலரும் ஆதரவு அடித்து வந்தார்கள்.
இவ்வாறு 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் மகாலட்சுமி சமீப பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் உங்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி கேட்கும் பொழுது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்றிலிருந்து நான்கு லட்சம் இருக்கும் என கூறியுள்ளார் மேலும் இவருடைய தந்தை நடன பயிற்சியாளராக பணியாற்றி வருகிறாராம் .
அந்த வகையில் RRR,பொன்னியின் செல்வன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடன பயிற்சியாளராக மகாலட்சுமியின் தந்தை பணியாற்றியுள்ளார் என கூறியுள்ளார் இவ்வாறு இருக்கும்பொழுது நான் என் பணத்திற்காக இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் மேலும் ரசிகர்களும் மகாலட்சுமிக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.