மாதவனின் “ராக்கெட்ரி நம்பி” திரைப்படம் – 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? சோகத்தில் படக்குழு.!

madhavan
madhavan

நடிகர் மாதவன் 2000 ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது சினிமா பயணத்தை தமிழில் தொடர்ந்தார். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே நடிகர் மாதவன் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தமிழ் சினிமா தான் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து அவரை தூக்கி விட்டது. நடிகர் மாதவன் தமிழில் அலைபாயுதே திரைப்படத்தை தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி, ஜேஜே போன்ற நல்ல படங்களை கொடுத்து அசத்தியவர்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிப்பக்கம் தாவிக்கொண்டே இருந்ததால் இவரால் தமிழில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போனது. இருப்பினும் தொடர்ந்து தமிழில் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதையும் தாண்டி படங்களை தயாரிப்பது, இயக்குவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினார்.

அந்த வகையில் நடிகர் மாதவன் பிரம்மாண்ட பெருட்செலவில் ராக்கெட்ரி நம்பி என்ற திரைப்படத்தை  எடுத்தார். படம் ஒரு வழியாக பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்கில் வெளிவந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மற்றும் ரசிகர்கள்  படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினார்.

படமும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏன் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசினார் மேலும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ராக்கெட்ரி படம் இந்திய அளவில் 5 நாட்களில் மட்டுமே சுமார் 15 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.