“மாஸ்டர்” திரைப்படத்தை இயக்கியதற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

lokesh
lokesh

சினிமா உலகம் முன்பு போல் இல்லாமல் காலங்களுக்கு ஏற்றவாறு மாறி கொண்டே போகின்றன. அந்த காலத்திற்கு ஏற்றவாறு இளம் இயக்குனர்கள் ஆரம்பத்திலேயே அபான கதைகளை  இயக்குகின்றனர் அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் கை கொடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் டாப் நடிகர்களுடன் கதையைக் கூறும் அளவிற்கு பிரபலமடைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதலாவதாக முன்னணி நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த கைதி என்னும் மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லாமல் இருந்திருந்தாலும் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் கைகோர்த்தார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் செம்ம மாஸ் கட்சிகள் இருந்ததால் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த்து.இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனுக்கு கதை சொல்லி கமிட் ஆனார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு மிகப் பிடித்த நாயகன் கமல் தான் அதனால் விக்ரம் திரைப்படத்தை வேற லெவலில் எடுத்து வருகிறார் சொல்லப்போனால் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பல்வேறு  டாப் நடிகர்களை களமிறங்கி உள்ளார் . விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர் மேலும் பல்வேறு நடிகர்களை சொல்லாமல் படக்குழு சஸ்பென்சாக வைத்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் படங்களில் டாப் நடிகர்களுக்கு இணையாக வில்லன்களுக்கும் அதிக காட்சிகளை அசத்தியுள்ளார் உண்மையில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் பார்க்க முடிந்தது அதுபோல விக்ரம் திரைப்படத்திலும் பார்க்க முடியும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வந்துள்ளது அதன்படி பார்க்கையில்  சுமார் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அதன் காரணமாக  சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விக்ரம் படத்துக்காக 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.