லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வருகிறார்  தொடர் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் படங்களில்  தொடர்ந்து நடித்து வருவதால் இன்றுவரையிலும் அந்த நம்பர் ஒன் இடத்திற்கு சொந்தக்காரி யாக இருந்து வருகிறார். தனது சினிமா பயணத்துக்கு ஏற்றவாறு படங்களிலும் அதிக சம்பளம் வாங்கிய அசத்துகிறார் நயன்தாரா.

நயன்தாரா தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவருடன் கைகோர்த்து தற்பொழுது படங்களை தயாரித்தும் அதிலும் காசு பார்ப்பதால் நாலாபக்கமும் அவருக்கு பணம் வந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இமைக்கா நொடி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து அதர்வா, விஜய் சேதுபதி, அனுராக், ராசி கண்ணா மற்றும் டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் காமெடியாகவும் அதேசமயம் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த உருவாகியிருந்தால் படம் அனைத்து தரப்பட்ட மக்கள் இலகுவாக கவர்ந்து இழுத்து நன்றாகவே ஓடியது.

இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது அதில் திறமையாக நடித்து அசத்தினார் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம் அதன்படி இந்தத் திரைப்படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா சுமார் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் பக்கத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.