கார்த்தியின் “விருமன்” திரைப்படம் உலகம் முழுவதும் அள்ளிய முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

karthi
karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தோல்வி படமாக மாறியதை எடுத்து அதை மாற்றியமைக்க சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து புதிய படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது கார்த்தி கையில் மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன.

அதில் முதலாவதாக முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன், அதிதி ஷங்கர், சூரி, சிங்கம்புலி, மனோஜ், பிரகாஷ்ராஜ், மைனா நந்தினி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

கார்த்தியின் விருமன் திரைப்படம் காமெடி சென்டிமென்ட் ஆக்சன் என அனைத்தும் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. விருமன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்களும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்து வருவதால் அடுத்த அடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பு பெற்று ஓடும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்கையில் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 5.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் கார்த்தியின் விருமன்  திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது

அதன்படி விருமன் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் மட்டுமே சுமார் 7 லிருந்து 8 கோடி வரை வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.