தமிழகத்தில் மட்டும் கார்த்தியின் சர்கார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.?

sardhar-movie
sardhar-movie

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள சர்தார். இந்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது அப்பா, மகன் என இரு வேடங்களில் கார்த்திக் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் பதினாறு கெட்டப்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரில் பார்க்கும்பொழுது கூட நடிகர் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்திருந்தது தெரியவில்லை எனவே ரகசியமாக இருந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் கலந்துள்ள நிலையில் நடிகர் கார்த்திக்கை கொண்டாடி வருகிறார்கள் இவருடைய நடிப்பில் இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் ரூபாய் 14 கோடி வசூல் செய்து இருக்கிறதாம்.

மேலும் நல்ல விமர்சனங்களும் இருந்து வரும் நிலையில் தீபாவளி விடுமுறையில் இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இவ்வாறு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் விருமன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது அதன் பிறகு பொன்னியின் செல்வன் தற்பொழுது சர்தார் என வெற்றி திரைப்படங்களை தந்து தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார் நடிகர் கார்த்திக்.