மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

marudhanaykam
marudhanaykam

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் கால் தடம் பதித்து பின் ஒரு வயதை எட்டிய பிறகு ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் நடிக்கத் தொடங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். உலகநாயகன் கமலஹாசன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து அதை விட தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது வழக்கம்.

மேலும் புதுமையான ஒரு விஷயத்தை தனது படங்களில் வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கமலஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் இந்தியன் 2, தேவர்மகன்  2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்னவோ உலக நாயகன் கமலஹாசன் நடித்த மருதநாயகம் படத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Samuel charles hill எழுதிய யூசுப்கான் புத்தகத்தை 80% தழுவியும் கமல்ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதைதான் மருதநாயகம். கமலின் கனவு திரைப்படமாக உருவாகி வந்தது இது ஆனால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது மீண்டும் துவங்க முடியாத சூழ்நிலையில் அப்படியே போட்டது தற்போதுவரை அதை மீண்டும் இயக்க கமலும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

35 நிமிடம் படமாக்கப்பட்ட மருதநாயகம் அதிலிருந்து தொடர வாய்ப்பு உள்ளதாக அண்மையில் தெரிவித்தார் ஆனால் இதை தொடர்வதற்கு திறமை உள்ள ஆட்கள் தேவை அப்படி என்றால் தான் இந்த படத்தை எடுக்க முடியும் என கூறினார்.

இந்த படம் 1897ம் ஆண்டு படமாக்கப்பட்டது அப்போதைய காலகட்டத்தில் இடையே சுமார் 115 கோடி பட்ஜெட்டில் உருவானது தற்போது இந்த படத்தை எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 700 கோடி பட்ஜெட் வரும் என கூறப்படுகிறது.