எனக்கு ஏன் முன்னணி நடிகர்… காமெடி நடிகரே போதும் என நிருபித்து காட்டிய வெற்றிமாறன்.. ஆத்தாடி இரண்டு வாரத்தில் இத்தனை கோடியா விடுதலை.?

viduthalai

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து தற்பொழுது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் சூரி இவர் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்,சேத்தன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள்.

படம் வெளியான பொழுது பல சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனிடம் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பதை மட்டும் கூறுங்கள் என கேட்டு வந்தார்கள் அதற்கு ஏற்றது போல் வெற்றிமாறனும் இன்னும் ஒரு சில காட்சிகளை மட்டும் எடுத்து விட்டால் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் வெற்றி மாறனின் திரைப்பயணத்தில் பல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களை கொடுத்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகவும் மக்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார் ஒரு சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விட்டது.

ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த விடுதலை திரைப்படத்தின் இரண்டு வாரம் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதன்படி பார்த்தால் விடுதலை திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரத்தில் ரூ.36 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

வசூலில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து இந்த வசூல் தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இன்னும் நிறைய வசூல் செய்ய வாழ்த்துகிறோம் என கூறி வருகிறார்கள்.

vijay-sethupathi
vijay-sethupathi