Paruthiveeran : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் கார்த்தி. இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் சர்தார், பொன்னியின் செல்வன் 1, 2 போன்ற படங்கள் வெளிவந்து வெற்றியை ருசித்தது.
அடுத்து கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று குறைந்த வசூலை அள்ளியது.
நாட்கள் அதிகமாக வசூலில் மரண அடி வாங்கியது இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்கள் கதையை கேட்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் கார்த்தி நடித்த முதல் படமான பருத்திவீரன்
படத்தின் மொத்த வசூல் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக பேசியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்… 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் படம் பருத்திவீரன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ப்ரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் ஆக்சன், எமோஷனல், ரொமான்டிக், காமெடி என அனைத்தும் கலந்து இருந்ததால் அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக வெற்றி கண்டது.
பல வருடங்கள் கழித்து பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் வசூல் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் 4.85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பருத்திவீரன் திரைப்படம் 25 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக கூறியுள்ளார். இது அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயம்.