நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் படையப்பா திரைப்படம் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க இவருக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பை தந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்த்தால் படையப்பா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ.14 கோடி தானாம்.ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடிக்க ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்த இந்த திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.14 என்றாலும் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.41 கோடி வசூல் செய்துள்ளதாம்.
அதே போல் வெளிநாட்டில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாம் மொத்தமாக ரூ.51 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மிகவும் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் நிறைய வசூல் செய்து விட்டது.இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 43.55 சதவீதம் லாபம் கிடைத்துள்ளதாம். அதே போல் விநியோகஸ்தர்களுக்கு 35.7 சதவீதம் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்றைய நாளோடு 24ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினியுடன் இணைந்து நடித்த கடைசி படமாகவும் இது திகழ்ந்து விட்டது.
பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்ப்பை தந்தார்கள் இந்நிலையில் படம் வெளியாகி 24 வருடம் ஆகிய நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைதள பக்கங்களில் ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
24 வருடங்களான படையப்பா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகும் 3 மணி நேரம் ஓடும் ஒரு படமாகவும் படையப்பா திரைப்படம் திகழ்ந்து வருகிறது. ஆனால் எந்த ஒரு காட்சியிலும் போர் அடிக்கும் சீன்களே பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.