விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலராக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.. இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக்பாஸ் 6 வது சீசன் அண்மையில் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம் போல..
உலக நாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். ஆனால் இந்த சீசனுக்காக கமல் பல கோடி அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 6 -ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் ஜிபி முத்து மட்டும் சொந்தக்காராணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிலிருந்து இருந்திருந்தார் அவர்தான் டைட்டில் வின்னர் ஆக இருந்திருப்பார் ஆனால் அந்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட்டு விட்டார்.. ஜி பி முத்துவை தவிர மற்றவர்கள் அனைவரும் வாரம் வாரம் நடத்தப்படும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினார்.
கடைசியாக பிக் பாஸ் வீட்டை விட்டு பிரபல சீரியல் நடிகை ரச்சிதா வெளியேறினார் அவரைத் தொடர்ந்து இந்த வாரம் நடந்த எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு ஏடிகே வெளியேற இருக்கிறார் இவர் மைனா நந்தினி உறவினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்..
ஏடிகே பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 90 நாட்களை தாண்டி பயணித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏடிகே ஒரு நாளைக்கு 16,000 முதல் 19000 வரை சம்பளம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதன்படி பார்த்தால் மிகப்பெரிய ஒரு தொகையை ஏ டி கே தற்போது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் என தெரிய வருகிறது.