லியோ படத்தில் நடிக்க “கௌதம் மேனன்” வாங்கும் ஒரு நாள் சம்பளம்.? பொறாமையில் மற்ற நடிகர்கள்

leo-
leo-

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் என்ற பட்டத்தை தற்பொழுது லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் இவர் இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி படங்கள்.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ என்னும் திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..

மற்றும் சஞ்சய் தத் என பலர் நடிக்க இருக்கின்றனர் மேலும் விஜய்க்கு ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் திரிஷா போன்றவர்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்க லியோ படம் அண்மையில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதில் ரிலீஸ் தேதியையும் மென்ஷன் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான மிஷ்கின் மற்றும் கௌதம்மேனன் எவ்வளவு சம்பளம் வாங்கி நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி பார்க்கையில் மிஷ்கின் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்கி நடிப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் லியோ திரைப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.