நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாறன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்து ரசிகர்களுக்கு பிடிக்கும் படியான படங்களை கொடுக்க வேண்டும் என தனுஷ் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதில் முதலாவதாக திருச்சிற்றம்பலம் படம் சென்ற மாதம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷின் படம் திரையரங்கில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். படத்தின் கதையும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்கை நாடி கண்டுகளித்தனர்.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷுக்கு மூன்று ஹீரோயின்கள் ஆனால் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்யா மேனனின் நடிப்பு இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அவர்தான் படத்தில் அதிகம் தனுசுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் காதல் சென்டிமென்ட் ஃப்ரெண்ட்ஷிப் என அனைத்தும் கலந்திருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில் இதுவரை படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியுள்ளது.
ஆகையால் இதுவரை மொத்தமாக திருச்சிற்றம்பலம் படம் அள்ளிய வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படம் மொத்தமாக இதுவரை 88 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 15 நாட்களிலேயே இவ்வளவு வசூல் செய்திருப்பது இந்த படத்திற்கு நல்ல வெற்றியாக பார்க்கப்படுகிறது