சந்திரமுகி 2 படத்துடன் போட்டி போடும் “சித்தா” – இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

chithha
chithha

chithha movie  : கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன், சந்திரமுகி 2, சித்தா ஆகிய மூன்று ரிலீஸாகி போட்டி போட்டன இதில் சந்திரமுகி 2 நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது காரணம்.  சந்திரமுகி படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

அதனால் போட்டி போட்டுக்கொண்டு சந்திரமுகி 2 படத்தை பார்த்து வருகின்றனர். வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இறைவன் திரைப்படம் முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது படத்தில் கொடூர கொலைகள்  இருப்பதால் 18க்கு வயதுக்கு கீழ் இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி இல்லை..

குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் சென்றடையவில்லை அதனால் ஓரளவு சுமாரான வசூலை பெற்றது இரண்டு படங்களுக்கு நடுவில் சித்தார்த் நடித்த சித்தா படம் மாட்டிக்கொண்டது ஆரம்பத்தில் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் போகப்போக குடும்ப ஆடியன்ஸ் சித்தா படத்தை கொண்டாட தற்பொழுது வசூல் வேட்டையும் நடத்த ஆரம்பித்துள்ளது.

அருண்குமார் எஸ் யூ இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவான படம் சித்தா. கதை என்னவென்றால்..  சித்தார்த்தின் அண்ணன் இறந்துவிட அண்ணியையும், அண்ணன் மகளையும் இவர் பார்த்துக் கொள்கிறார். அண்ணன் மகள் மீது அதிக பாசம் வைத்து இருகிறார் சித்தார்த். ஒரு தடவை அண்ணன் மகளுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது அதிலிருந்து குழந்தை எப்படி மீட்டார் அந்த பிரச்சனையை எப்படி முடித்தார் என்பதுதான் படத்தின் கதை..

எமோஷனல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் இருந்ததால் தற்பொழுது நல்ல வரவேற்பைப் பற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் வேட்டையும் நடத்த ஆரம்பித்துள்ளது இதுவரை மட்டுமே சித்தா திரைப்படம்.  11.5 கோடி வசூல் செய்துள்ளது வருகின்ற நாட்களில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இன்னும் நல்ல சப்போர்ட்டே கிடைக்கும் பட்சத்தில் சந்திரமுகி 2, இறைவன் படத்திற்கு சித்தா படம் டஃப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.