ஏ ஆர் முருகதாஸ் “தீனா” படத்திற்காக வாங்கிய முதல் பணம் எவ்வளவு தெரியுமா.? வெளிவரும் சுவாரஸ்ய தகவல்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். முதலில் ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து தீனா என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ன படத்தை இயக்கினார் ஆனால் அந்த படம் பெரியளவு ஹிட் அடிக்க வில்லை அதன் பிறகு  படங்களை இயக்காமல் இருந்து வருகிறார் .

சினிமா உலகில் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தயாரிப்பாளராகவும் ஒன்று இரண்டு படங்களை தயாரித்துள்ளார்.  இப்படியே கொடி கட்டி பறந்தா ஏ ஆர் முருகதாஸ் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்களுக்கு அசிஸ்டெண்டாகவும் வேலை செய்துள்ளார் அப்பொழுது இவரது திறமையை பற்றி பலர் பேசினர் ஒரு கட்டத்தில் நடிகர் அஜித் ஏ ஆர் முருகதாஸை வரவைத்து கதையை கேட்க ரொம்ப பிடித்து போகவே..

உடனே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணினாராம் தீனா படம் சூப்பராக உருவானது படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்த படம் ஏ ஆர் முருகதாஸுக்கும் சரி அஜித்துக்கும் சரி அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்ததாம் இந்த படம் குறித்து தான் ஒரு தகவல் வெளியே வந்துள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் தீனா படத்தை இயக்க முதலில் வாங்கிய அட்வான்ஸ் சம்பளம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் தீனா பட கதையை அஜித்திடம் சொன்னவுடன் அஜித் அவரிடம் இருந்த இரண்டு 500 ரூபாய் நோட்டு தாள் மற்றும் தயாரிப்பாளரிடம் ஒரு ரூபாய் வாங்கி அங்கேயே தான் அட்வான்ஸ் சம்பளத்தை கொடுத்ததாக முருகதாஸ் தெரிவித்தார்.