Anikha : தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை அனிகா சுரேந்தர். முதலில் மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து தமிழில் மிருதன் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார் படத்தில் இவருடைய காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகினர். மேலும் விளம்பர வாய்ப்புகள் மற்றும் பட வாய்ப்புகளும் குவிந்தது. அப்படி ஹீரோயின் ஆக இவர் நடித்த ஓ மை டார்லிங் படம் சுமாராக ஓடிதை தொடர்ந்து அடுத்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அனிகா கைவசம்.. கார்த்தி கல்யாணி, பீட்டி சார், வாசுவின் கர்ப்பிணிகள் விஆர் 7, தனுஷ் 50 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் மிக ஆக்டிவா இருக்கும் அனிகா சுரேந்தர் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி வந்து கொண்டே இருக்கிறார்.
அவருடைய சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அனிகா சுரேந்தரின் சொத்து மதிப்பு சுமார் பதினாறு கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் ஒரு வருடத்திற்கு இரண்டு கோடியில் இருந்து மூன்று கோடி வரை சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.