துணிவு, வாரிசு படத்திற்காக அஜித் – விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ajith-and-vijay
ajith-and-vijay

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.  துணிவு,வாரிசு இருபடங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் அள்ளி வருக்கிறது இருப்பினும் இந்த பொங்கல் ரேசில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள மீடியா உலகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இதனால் படத்தின் ஒவ்வொரு நாள் வசூலும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்திழுத்துள்ளது. மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட்  நிறைந்த படமாக இருப்பதால்..

அனைத்து தரப்பினரையும் இழுத்து உள்ளது தொடர்ந்து இரண்டு படங்களும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன முதல் நாளில் அஜித்தின் துணிவு படம் 21.58 கோடி ரூபாய் மொத்தமாக வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் 8 கோடி 9 கோடி என வசூல் செய்து மூன்று நாட்களில் 39 கோடி வசூலில் செய்தது.

விஜயின் வாரிசு திரைப்படம் முதல் நாளில்  19.58 கோடி அடுத்தடுத்த நாட்களில் 7.18 கோடி 8.50 கோடி வசந்த் செய்து மூன்று நாட்களில் மொத்தமாக 35. 26 கோடி வசூல் செய்தன. இப்பொழுதும் தொடர்ந்து நல்ல வசூலை இரண்டு திரைப்படங்களும் அள்ளி ஓடிக்கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அஜித் துணிவு, விஜய் வாரிசு படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி அஜித் துணிவு படத்திற்கு 70 கோடியும், விஜய் வாரிசு படத்திற்காக 125 கோடியும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.