சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் ஒரு பக்கம் தொடர்ந்து வெற்றி ருசித்து ஓடிக்கொண்டிருக்க அவரது இரு மகள்களும் மற்றொரு பக்கம் படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கமலின் மூத்த மகள் சுருதிஹாசன் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இவர் முதலில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித்துடன் வேதாளம், விஜயுடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3, தனுஷ் உடன் 3, விஷாலுடன் பூஜை போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டுள்ளார் .
இதனால் அவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் சினிமா உலகில் எவ்வளவு தான் வெற்றியை ருசித்தாலும் ரசிகர்களும் தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சுருதிஹாசன் தொடர்ந்து கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் அசத்தி வந்தார்
இதனால் அவருக்கு என்ன ஒரு ரசிகர்கள் கூட்டமும் உருவானது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவ்வாறு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் ஆக்ஷன் சீனில் பின்னி பெடலெடுத்து உள்ளார் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் சலார் திரைப்படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.