40 வருடங்களுக்கு மேலாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது கூட சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்கள் பட்டாளத்தையும், மக்களையும் கவர்ந்து இழுக்க..
அப்டேட்டை வெளிவிட்டு வண்ணமே இருக்கின்றன வெகு விரைவிலேயே இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படியிருக்க சினிமா உலகில் நீண்ட வருடங்களாக நடித்து வரும் ரஜினிக்கு இந்திய அரசு தனது 67வது தேசிய விருதுகள் விழாவில் ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே எடுத்து அழகு பார்த்து உள்ளது.
இந்த விருதை பெற்ற உடனேயே தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை வாங்கிய விருதுகள் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அந்த லிஸ்ட்டை தற்போது நாம் பார்ப்போம். சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதுகள் முள்ளும் மலரும் 1978.
மூன்றுமுகம் 1995 படையப்பா 1990 சந்திரமுகி 2005 சிவாஜி 2007 மற்றும் நந்தி விருதுகள் பத்ம பூஷன் 2000 பத்மவிபூஷன் 2016 நந்தி விருது 2016 பல விருதுகளை தட்டி சென்ற இவர் தற்போது இந்த விருதையும் கைப்பற்றி உள்ளதால் உலகில் யாரும் தொட முடியாத உச்சத்தை அவர் கேட்டுள்ளார்.
மேலும் இதை அறிந்த ரசிகர்கள் மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் மேலும் ரஜினி விருதுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்தும் ட்ரெண்டிங்கில் வர வைத்துள்ளனர்.