தோல்வியை கண்டு பயப்படாத ஒரே மனிதன் “மணிரத்தினம்” – பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க எத்தனை முறை முயற்சி செய்தார் தெரியுமா.?

ponniyin--selvan
ponniyin--selvan

சினிமா உலகில் இருக்கும் நடிகர் தொடங்கி இயக்குனர், தயாரிப்பாளர்கள் பலருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் என்பது காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரை பல்வேறு திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவருக்கு என்று ஒரு கனவு படமாக பார்க்கப்பட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான்.

பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.

ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படம் உருவாக சுமார் 500 கோடி பட்ஜெட் எடுத்துக் கொண்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் டீசர் நேத்து மாலை 6 மணிக்கு வெளியானது. படத்தின் டீசர் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ் சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா மற்றும் பல பிரபலங்கள் நடித்து  உள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மணிரத்தினம் சில தகவல்களை போட்டு உடைத்தார் அதில் அவர் சொன்னது பொன்னியின் செல்வன் படம் எனக்கு கனவு படம்.

இந்த படத்தை எடுக்க நான் ஒரு தடவை இரண்டு தடவை முயற்சி செய்யவில்லை மூன்று தடவை முயற்சி செய்தேன் ஆனால் அது நிறைவேறாமல் போனது ஆனால் நான்காவது முறையாக எப்படியோ எடுத்து விட்டேன். இது எனது கனவு படம் நிச்சயம் இது எல்லோரையும் திருப்திப்படுத்தும் என கூறியுள்ளார். 90, 2000, 2010 ஆகிய காலகட்டங்களில் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க திட்டம் போட்டோம் ஆனால் சில காரணங்களால் அப்பொழுது இந்த படத்தை எடுக்க முடியவில்லை என மணிரத்தினம் வெளிப்படையாக கூறினார்.