சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புரை பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தினை மித்திரன் ஜகவர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானது இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி இன்று திரையரங்குகளில் பெரியதாக உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றிய உள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ்சை ஒட்டி திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்தர்களான ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வெளியாகும் தியேட்டர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அப்படி சென்னையில் 19 திரையரங்குகளிலும்,செங்கல்பட்டு பகுதியில் 35 திரையரங்குகளிலும்,சேலம் ஏரியாவில் 28, திரையரங்குகளிலும் திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்கிலும் திருச்சிற்றபலம் வெளியாகி உள்ளது.
இவ்வாறு பார்க்கும் பொழுது தமிழகத்தில் உள்ள 300 திரையரங்கங்களில் திருச்சமூலம் படம் வெளியாகி இருக்கிறது இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் டெலிவரி பாய்யாக நடித்துள்ளார்.
இவருடைய தாத்தாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், அப்பாவாக நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராசி கண்ணா ஆகியோர்கள் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்கள்.
மேலும் நீண்ட வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் இந்த படத்தின் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார்கள் அதாவது அனிருத் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.