நேற்று ரஹானேவின் வெறியாட்டத்தை பார்த்திங்க.! இன்னைக்கு தமிழ் பசங்க வெறியாட்டம் வேற லெவல்.! 21 பந்தில் எத்தனை ரன் தெரியுமா.?

t20
t20

குஜராத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில்  13 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் குஜராத் அணியின் தூண்களாக முதலில் துவக்க வீரர்கள் ஆன சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினார்கள்.

இதில் சகா 17 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார் அதன் பிறகு தமிழக வீரரான சாய் சுதர்சன் உள்ளே இறங்கினார் அவருடன் சுப்மன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் தங்களுடைய ஆட்டத்தை சிறப்பாக ஆடி வந்தார்கள் இதில்  சுப்மண் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவிட்டார் இந்த இரண்டு ஜோடியும் 67 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் இருந்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக களம் இறங்கிய அபினவ் மனோகர் விரைவாக 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியே சென்று விட்டார் அதேபோல் மறுமுனையில் சாய் சுதர்சன்  கடந்த போட்டியில் இருந்து தன்னுடைய முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வந்தார் அப்படி இருக்கும் நிலையில் மூன்று விக்கெட்கள் பறிபோன பின் உள்ளே வந்த விஜய் சங்கர் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள்.

இதில் சாய் சுதர்சன் விஜய் சங்கர் என இருவரும்  அரை சாதம் கடந்தார் அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார் இவர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 17.3 ஓவர்களில் நான்கு விக்கெட் களை இழந்து 153 ரன்கள் மட்டுமே குஜராத் அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் 180 டு 185 ரன்கள் மட்டுமே குஜராத் எடுக்கும் என கனித்து வைத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

18 வது ஓவரில் 25 ரன்களையும் 20 வது ஓவரில் 20 ரன்களையும் குஜராத் அணி அடிக்க ஸ்கோர் 200-ஐ கடந்தது அதில் விஜய் சங்கர் தனி ஆளாக நின்று 23 ரன்கள் 19 ரன்கள் முறையே 19 ஆவது இருபதாவது ஓவர்களில் அடித்துள்ளார்.   21 பந்தில் அரைசதம் அடித்த விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் இவர் 24 பந்துகளில் 5 சிக்சர் நான்கு பவுண்டரி என 63 ரன்கள் மொத்தமாக எடுத்திருந்தார்.

20 ஓவர் முடிவில் நாலு விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 204 ரன்கள் குவித்துள்ளது.