“ஈஸ்வரன்” திரைப்படத்திற்கு முன்பாக நடிகர் சிம்பு எவ்வளவு கிலோ உடல் எடையை குறைத்து உள்ளார் தெரியுமா.? அவரே சொன்ன பேட்டியில் சொன்ன சுவாரசிய தகவல்.

simbu
simbu

இளம் வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்து தற்போது வரையிலும் சினிமா உலகில் வெற்றி நாயகனாக ஓடிக் கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. சினிமா உலகில் ஆரம்பத்தில் தொடர் ஹிட் படங்களை கோடுத்தாலும் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை மேலும் சில வருடங்களாக சிம்பு சினிமாவில் நடிக்காமல் இருந்ததால் படங்கள் வராமலேயே போயின.

மேலும் நடிகர் சிம்பு உடல் எடையை தாறுமாறாக ஏற்றிக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத போல் மாறினார். இது அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தமடையச் செய்தது ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு தனது எண்ணங்களையும் உடலையும் முற்றிலுமாக ஆன்மிக வழியில் மாற்றிக்கொண்டு தற்போது சினிமா உலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

முதலில் நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்தரன் உடன் கைகோர்த்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் பல மாதங்கள் இழுபறியில் இருந்த நிலையில் ஒருவழியாக மாநாடு படக்குழு தேதியைப் பக்ஸ் செய்து  விட்டது.

இந்த மாதம் 25ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது இதில் சிம்பு, யுவன் சங்கர் ராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து தெலுங்கில் புரமோட் செய்வதற்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் கொரோனா காலகட்டத்தில் நான் 27 கிலோ உடல் எடையை குறைப்பதாக தெரிவித்தார். நடிகர் சிம்பு உடல் அளவிலும், மன அளவிலும் ஆன்மீக வழியை பின்பற்றி மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக சொல்லியிருந்தார் இச்செய்தி தற்போது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளதோடு மாநாடு படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.