தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின்பு காமெடி நடிகனாக களமிறங்கி தற்போது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் யோகிபாபு இவர் தமிழ் திரையுலகில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று முதலில் நடித்து வந்தார்.
என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அதனைத் தொடர்ந்து இவருக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்களில் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக தற்போது புகழ்பெற்று விளங்கி வருகிறார்.
காமெடி நடிகனாக நடித்து வந்த இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த கோலமாவு கோகிலா,கூர்கா போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்ததால் இவர் தற்போது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து ஒரு பேட்டி ஒன்றில் யோகி பாபு தனது பள்ளியில் தனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி கூறியுள்ளாராம் அதில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தேர்வில் தோல்வி அடைந்தேன்.
அதுமட்டுமல்லாமல் ஏழு முறை தோல்வியடைந்த எனக்கு படிப்பு கைகொடுக்க வில்லை இருந்தாலும் தற்போது சினிமாவில் நான் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வருகிறேன் என கூறியுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல சினிமா பிரபலங்களும் இதுதான் உண்மை என கூறி வருகிறார்கள்.