தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அண்மையில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறுகின்றன அந்த காரணத்தினால் இவரது அடுத்த திரைப்படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியது இந்த புகைப்படம் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்து உறைக்கும் படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் இந்த படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இத்திரைப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்து பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், திவ்யா துரைசாமி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர் இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் வேற ஒரு லெவலில் எடுத்துள்ளார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
நடிகர் சூரியாவின் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்து உள்ளதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடி உள்ளனர். எது எப்படியோ படத்திற்கான வரவேற்பு ஜோராக அமைந்துள்ளதால் படக்குழு மற்றும் சூர்யா செம்ம சந்தோஷத்தில் திளைக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் வசூல் நிலவரமும் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் நாளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 6 கோடியிலிருந்து 7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது 2-வது நாள் முடிவில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.