தமிழ் சினிமாவில் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் எடுத்த உடனேயே நல்ல பெயரை பெற்று உள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கி பின் அதிக பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார் அனைத்திலும் வெற்றி கண்டு வருவதால் தற்போது தொடமுடியாத வளர்ச்சியை எட்டி உள்ளார்.
அட்டகத்தி என்னும் படத்தை எடுத்ததன் மூலம் இயக்குனராக கால்தடம் பதித்தார் அதன்பிறகு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ். ரஜினியை வைத்து கபாலி போன்ற மாபெரும் படத்தைக் கொடுத்தார். இப்படி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தை கொடுத்து வசூலிலும், வசனத்தின் மூலமும் நல்ல வரவேற்பை பெற்று.
தற்போது இந்திய அளவில் கவனிக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார் மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்து கிடக்கின்றனர். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்வது உண்டு ஆனால் அவர்களுகாக படத்தின் கதையை மாற்ற மாட்டார்கள் ஏனென்றால் படத்தின் தன்மை போய்விடும் என்பதால் யார் எது சொன்னாலும் படத்தின் கதைப்படி எடுப்பது தான் பா ரஞ்சித் எது பிடிக்கும்.
அதனால் தான் அவர் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அவர் முதலில் எடுத்த அட்டகத்தி திரைப்படத்தை பற்றி ஒரு சூப்பர் தகவல் கசிந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகரான தினேஷ் நடித்திருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 2 கோடி தானாம். படத்தின் விளம்பரத்திற்காக 1.5 கோடி செலவு செய்து உள்ளனர் ஆனால் படம் மொத்தமாக 4.5 கோடி வசூலை ஈட்டியது. செலவு எல்லாம் போக இந்த படம் ஒரு கோடி லாபம் கிடைத்தாக தகவல் தெரிவிக்கின்றன.