சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த விஜயகாந்த்.. இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் எத்தனை தெரியுமா.?

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : 80, 90 களில் தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கபட்டது ரஜினி மற்றும் கமல் அடுத்த இடத்தை பிடித்து மாஸ் காட்டியவர்தான் விஜயகாந்த் முதலில் கிராமத்து கதைய அம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த இவர் போக போக அனைத்து தரப்பட்ட கதைகளிலும் நடித்து வெற்றி வாகை சூடினார்.

தொடர்ந்து வெற்றி கண்டு வந்த விஜயகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் கண்டார் அதிலும் தொட்டதெல்லாமே வெற்றி தான். சமிப காலமாக உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் திடீரென நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார். தற்பொழுது விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்கள்.. டிசம்பரில் மறைந்த முக்கிய தலைவர்கள்

மாலை 4:45 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.. விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள்..

ராமன் ஸ்ரீராமன் :  விஜயகாந்த் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் ராமன் ஸ்ரீராமன் இந்த படத்தை டி கே பிரசாந்த் எழுதி இயக்க பாபு தயாரித்திருந்தார். படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பு பெற்றது.

என்னை வளர்த்து விட்டவர் இன்று இல்லை.. எனக்கு இது ஒரு துக்கமான நாள் – கண்கலங்கிய சரத்குமார்

உழவன் மகன் : அரவிந்த் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஆக்சன் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

காலையும் நீயே மாலையும் நீயே  : நடிகரும், இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சூப்பரான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து பொறுத்தது போதும், தர்மம் வெல்லும், சிறையில் பூத்த சின்ன மலர், ராஜதுரை, காந்தி பிறந்த மண், வீரம் வெளஞ்ச மண்ணு, கள்ளழகர், கண்ணுபட போகுதய்யா, வானத்தைப்போல, தவசி, பேரரசு, மரியாதை என மொத்தம் 16 படங்களில் இரட்டை வேடம் போட்டு விஜயகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.