ரஜினி, கமல் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா.? அதில் இத்தனை படங்கள் ஹிட்.!

rajini and kamal
rajini and kamal

சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பல நடிகர்கள் தங்களது படங்கள் மூலம் மோதி கொள்வது வழக்கம் ஆனால் நிஜ உலகில் அவர்கள் எதிர்மறாக இருப்பார்கள் எப்போதுமே நல்ல நண்பர்களாக இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் நல்ல நண்பர்களாக நிஜ வாழ்க்கையில் இருக்கின்றனர்.

ஆனால் படங்கள் என்று வந்துவிட்டால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இருவருமே போட்டி போட்டுக் கொள்வார்கள் அது காலம் காலமாக நடந்து வருகிறது. இப்படி சினிமா உலகில் ஓடினாலும் ஒரு சில படங்களில் இவர்கள் இணைந்தும் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமலும்..

நடித்த திரைப்படங்கள் குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்.. இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 13 திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதில் ஏழு படங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது.

ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த 13 படங்களான அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீன் அற்புத விளக்கு, நட்சத்திரம், தில்லுமுல்லு, அக்னிசாட்சி போன்றவைகளில் இவர்கள் இருவரும் இணைந்து  நடித்துள்ளனர்.

அதன் பிறகு தமிழ் சினிமா உலகில் இருவரும் தனக்கென ஒரு டிராக்கை எடுத்துக்கொண்டு அதில் பயணித்து வருகின்றனர் ஆனால் இப்பொழுதும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர் இதனால் நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.