Do you know how many fight scenes in total in the master movie : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார், பிகில் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் படத்தில் விஜய்சேதுபதி மாளவிகா மோகனன், கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே எப்படி இருக்கும் என அவர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தை பார்த்தாலே தெரியும்.
அதனால் மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது ரசிகர்களிடம், சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமிலலாமல் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளது ரசிகர்களுடைய இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டியது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது இதற்கிடையில் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தார்கள் ஆனால் இதுவரை டிரைலர் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் எத்தனை சண்டை காட்சிகள் இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது, மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார், மாஸ்டர் திரைப்படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் இருப்பதாகவும் சண்டை வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வைக்காமல் கதையுடன் ஒத்து இருக்கும் சண்டைக்காட்சிகள் தான் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
இப்படிதான் இதற்குமுன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய கைதி திரைப்படத்திலும் கதையுடன் ஒன்றி அமைந்திருக்கும் சண்டை காட்சிகள், அதேபோல் இந்த திரைப்படத்திலும் சண்டைக்காட்சிகள் கதையுடன் தான் இருக்கிறது என கூறுகிறார்கள்.
மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சாக அடிபடுகிறது.