உண்மையான வசூல் மன்னன் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.. ஏனென்றால் தமிழ் திரை உலகில் ரஜினி படங்கள் தான் மூன்று முறை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான நடிகர் ரஜினி கடந்த சில வருடங்களாக நடிக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன.
இதனால் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருக்கிறது. இதிலிருந்து மாற்றிக் கொள்ள நடிகர் ரஜினி இளம் இயக்குனர் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “ஜெயிலர்” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் கதை மீது ரஜினி ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறார்.
எனவே இந்த படம் நிச்சயம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது அதேசமயம் இந்த படத்தில் ரஜினி சிறைச்சாலை உயர் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து ஜாக்கி ஷராப், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி.. ரம்யா கிருஷ்ணன் என பல திரைப் பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரஜினி “லால் சலாம்” திரைப்படத்தில் ஒரு கேஸ் ரோலில் நடிக்கயுள்ளார். இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி இதுவரை தனது திரை வாழ்கையில் 169 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் எவ்வளவு % தோல்வி படங்களை கொடுத்துள்ளார்..
என்பது குறித்து பிரபல இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 169 படங்களில் நடித்து உள்ளார். அதில் 2 சதவீதம் படம் மட்டுமே தோல்வி படங்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.