இளைய தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ஏற்கனவே இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும் மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முதல் முறையாக பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது அது மட்டுமல்லாமல் யோகி பாபு,விடிவி கணேஷ்,அபர்ணா தாஸ் போன்ற பலரும் இதில் நடிக்கிறார்கள் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தான் சமீபகாலமாகவே தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில் தற்பொழுதும் பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே சுமார் 50 கோடிக்கு பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது ஆனால் மற்ற மொழிகளில் டப்பிங் ரைட்ஸ் மட்டுமே எத்தனை கோடிக்கு விலை போகும் என ஆச்சரியப்பட்டு இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.