சமீபகாலமாக பேய் படங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வலம் வருபவர் இயக்குனர் சுந்தர் சி. அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார் அந்த வகையில் மூன்றாவது பாகம் அண்மையில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் மேலும் சுந்தர் சி இயக்கி அவரும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகை சந்தித்தபோதே இந்த படத்தை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்தனர் அதற்கேற்றார்போல படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் கூட்டமாக திரைப்படத்தை பார்க்க கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது அது போல இந்த திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது அந்த வகையில் அரண்மனை 3 முதல் நாளில் மட்டும் சுமார் தமிழ்நாடு முழுவதும் 4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பண்டிகை நாளில் 4 கோடி என்பது ஒரு குறைந்த வசூல் என பலரும் கூறி வருகின்றனர் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என பலரும் கூறி வருகின்றனர்.