நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் கிராம கதையில் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியதால் அப்போதே கார்த்திக்கு பல ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.
அதைத் தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து அதிலேயும் வெற்றி கண்டு தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் விருமன்.
இந்த படமும் ஒரு கிராமத்து பின்னணி கதையில் உருவாக்கப்பட்டது. படத்தில் கார்த்தி உடன் இணைந்து ஹீரோயின் ஆக முதல் முதலாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகளும் விருமன் படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு கார்த்தி மற்றும் அதிதி சங்கரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருமன் திரைபடம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன அப்படி இந்த படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் 80 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படம் வெளியாகிய நாளிலிருந்து திரையரங்கில் ஹவுஸ் புல்லாகவே இருந்து வருகிறது அதனால் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படம் அதிகளவு வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன் படத்தை தொடர்ந்து கார்த்தி கையில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.