சினிமா உலகில் பேய் படத்திற்கு எப்போதும் நல்ல மவுசு இருக்கும் அதில் சற்று காமெடியை வைத்தால் இன்னும் அந்த திரைப்படம் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதை சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்தி சிறப்பான பேய் படங்களை எடுத்து கொடுத்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி.
ஆரம்பத்தில் இவர் ஆக்சன் மற்றும் காமெடி படங்களை கொடுத்து வந்த இவர் சமீப காலமாக பேய் படங்களை எடுத்து அசத்தி வருகிறார். அந்த படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது. இவர் எடுத்த அரண்மனை முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் மூன்றாம் பாகம் சமீபத்தில் உருவாகி திரையரங்கில் தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆர்யா நடித்து உள்ளார் மேலும் அவருடன் இணைந்து ராசிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், மனோபாலா, விவேக், யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படம் மட்டும்தான் திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதால் தற்போது நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அரண்மனை 3 படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 15.9 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்பதால் இந்த திரைப்படம் இன்னும் அதிக வசூலிக்கும் என கூறப்பட்டுள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் அடித்து நொறுக்குகிறது அரண்மனை 3 இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.