தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பருத்திவீரன் போன்ற ஒரு வித்தியாசமான கதையை பல வருடங்களாக தேடி வந்தார்.
அந்த வகையில் அது போன்ற ஒரு கதையை தான் இயக்குனர் சுகுமார் வைத்திருந்ததை அடுத்த கதையை கேட்டு பிடித்துப்போகவே உடனடியாக பல்லவர்கள் நடித்தார் அந்த படமே தற்போது புஷ்பமாக வெளிவந்துள்ளது. புஷ்பா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தின் டிரைலர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் ஆகியவை ரசிகர்களை வேற லெவல் கவர்ந்திழுத்தது.
வெளியே வந்தும் தற்போது இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ராஷ்மிகா மந்தனா, சமந்தா,பகத் பாசில் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர் ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து உள்ளதால்..
தற்போது இந்த திரைப்படம் பெரும் பாலான மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது மேலும் மலை காடு செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு புஷ்பா உருவாகி இருந்ததால் படத்தை பார்க்க தற்போது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு லாரி டிரைவராக நடித்து தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து உள்ளார்.
இந்த படம் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மட்டுமே பல கோடியை வசூலித்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆம் இந்த திரைப்படம் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 229 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.