அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் இந்தியாவில் ஐந்து மொழிகளில் வெளியானது மேலும் உலக அளவிலும் இந்த திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று சிறப்பாக வெற்றி நடை கண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
புஷ்பா திரைப்படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு இருந்தது படம் வித்தியாசமாக அதேசமயம் அவர்கள் பேசும் வார்த்தைகள் வித்தியாசமாக இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. புஷ்பா படத்தை பார்க்க திரையரங்கில் மக்கள் கூட்டம் தற்போதும் அலை மோதுகின்றன.
இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து ரஷ்மிகா மந்தனா, சமந்தா பகத் பாசில் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
புஷ்பா திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்து அசத்தி உள்ளது தமிழகத்தில் மட்டும் புஷ்பா திரைப்படம் சுமார் 25 கோடியை இதுவரை உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது ஆனால் முதல் முறையாக புஷ்பா திரைப்படம் அந்த சாதனையை செய்து வசதி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் மட்டுமே பிரபலமான அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இனி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் நல்லதொரு இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெறுவதோடு மட்டுமல்லாமல்வசூலையும் வாரிக் குவிக்கும்..