எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? இதோ முழு விவரம்

etharkum thuninthavan
etharkum thuninthavan

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியானது அதனால் ரசிகர்கள் சூர்யாவின் திரைப்படம் திரையரங்கிற்கு எப்பொழுது வரும் அதனை எப்பொழுது கொண்டாடப் போகிறோம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கிற்கு வந்தது.

படம் வெளியானதும் சூர்யா ரசிகர்கள் வழக்கம்போல் கொண்டாட்டத்தை ஆரம்பித்தார்கள். இந்த திரைப் படத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளதால் ரசிகர்கள் பெரிதாக கொண்டாடினார்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் மட்டும் பெரிதாக வசூல் கிடைக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இதுவரை  தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது இந்த திரைப்படம் மொத்தமாக தமிழகத்தில் மட்டும் 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக குறைந்த வசூலாக இந்த திரைப்படத்தின் வசூல் பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம்  வலிமை திரைப்படம் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டு வந்ததால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது அதனால் தான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வசூல் குறைந்தது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன் வினை ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.