“டாக்டர்” திரைப்படம் உலக அளவில் இதுவரை எவ்வளவு கோடி வசூல் செய்தது தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.

doctor-
doctor-

சமீபகாலமாக புதுமுக இயக்குனர்கள் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்கின்றனர். மேலும் அந்த இயக்குனர்கள் வெகுவிரைவில் டாப்  நட்சத்திரங்களின் படங்களை இயக்கி அவர்களுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் நெல்சன் திலிப்குமார் முதல்படமே நயன்தாரா, யோகி பாபு வைத்து கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார்.

அதை தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளது அதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தையும் எடுத்து வருகிறார்.

இதனால் திலிப் குமாரின் வரவேற்பு தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை எடுத்துதிருந்தார். இந்த திரைப்படம் டிரைலரை பார்க்கும்போது மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் படம் முழுக்க முழுக்க காமெடியை கையாண்டுள்ளனர்.

படத்தில் ஒவ்வொரு சீனிலும் காமெடி இருப்பதால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலை மோதுகின்றன முதல் நாளில் இருந்து தற்போது வரையிலும் விமர்சனமும் சரி வசூலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது முதல்நாள் ஆறுகோடி வசூல். அடுத்தடுத்த நாள்களில் இதன் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதும் டாக்டர் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய ஒரு வசூல் படமாக டாக்டர் படம் அமைந்துள்ளது.