அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமை மட்டும் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா? அதிர்ச்சியில் வெளிவந்த தகவல்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் தல அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்போவதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளாதாம்.United India Exports என்ற நிறுவனம் 26 கோடி தொகைக்கு திரையரங்கு உரிமையை பெற்றுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ajith
ajith