சினிமா உலகைப் பொறுத்தவரை எப்பொழுதும் ஆக்சன் படங்கள் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கவரும். மேலும் அந்த படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெறும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் அதை உடைத்தெறிந்து உள்ளது காமெடி படங்கள்.
அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துக் கொண்டு ஓடுகிறது டாக்டர் திரைப்படம் எந்த திரைப்படமும் நல்ல மெசேஜ் சொல்லி இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடி தான் இந்த படத்திற்கு ப்ளஸ் அந்த காரணத்தினால் தான் தற்போதும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
அந்த அளவிற்கு இந்த படத்திற்கு தற்போது வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது மேலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. முதல் நாளே ஆறு கோடிக்கு மேல் அள்ளியதை அதையடுத்து பிரபலங்கள் பலரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டனர்.
நல்ல வேட்டை நடத்தும் என்று அதுபோல இத்திரைப்படம் 60 கோடி மேல் வசூல் நடத்தியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. டாக்டர் திரைப்படம் பல டாப் நடிகர்கள் படங்களின் வசூலை ஓவர்டேக் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களின் வசூலை ஓவர்டேக் செய்த நிலையில் தற்போது சிவகார்த்தியன் டாக்டர் திரைப்படம்.
உலகம் முழுவதும் சுமார் 80 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இதைக் கேட்ட ரசிகர்கள் இப்பவே இவ்வளவு கலெக்ஷனை இன்னும் இருக்கிற நாட்களில் பல கோடிகளை அள்ளி 100 கோடியை அள்ளி வசூலில் புதிய சாதனை டாக்டர் படம் படைக்கும் என கூறி வருகின்றனர்.