வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவரது அடுத்த படமான 67வது திரைப்படத்தின் வேலைகளை ஜோராக ஆரம்பித்துள்ளார் இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் இயக்க உள்ளார். இதற்கு முன் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதைத் தொடர்ந்து இந்த படமும் இவர்களுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஆரம்பித்துள்ளது. அதன்படி தளபதி 67 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற உள்ளது. அதற்காக தனி விமானம் ஒன்று எடுத்துக்கொண்டு பட குழுவில் உள்ள பலரும் கிட்டத்தட்ட 180 பேர் போல் சென்றுள்ளனர்.
இந்த படத்தில் இணைந்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் அண்மையில் வெளிவந்து வைரலாகி வருகிறது. அதன்படி தளபதி 67 படத்தில் விஜய் உடன் கை கோர்த்து த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத் போன்ற பலரும் இணைந்துள்ளனர்.
விஜய் உடன் கைகோர்த்து கில்லி, ஆதி படங்களில் நடித்த த்ரிஷா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் இளம் நடிகை பிரியா ஆனந்த்தும் முதன்முறையாக விஜய் உடன் இணைந்துள்ளார். ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் பல வில்லன்கள் இருக்கின்றனர்.
அப்படி அர்ஜுன் சஞ்சய் தத் போன்றவர்கள் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கும் சஞ்சய் தத் இந்த படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.