எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பல படங்களை இயக்கி இருந்தாலும் அவரது பெயர் பெரிய அளவில் பேசப்படவில்லை ஆனால் பாகுபலி என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் ஹச் டி தரத்தில் படத்தை எடுத்து அசத்தியிருந்தார் இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியானது.
படம் விறுவிறுப்பாகவும் மற்றும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்ததால் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் இவரது மார்க்கெட் மிகப்பெரிய உயரத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு ராம் சரண் ஜூனியர் என்டிஆர் வைத்து RRR திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்திருந்ததால் இந்த படம் எப்போதோ வர வேண்டிய படம் ஆனால் தொடர்ந்து பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து ஒரு வழியாக கடந்த 25ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது படம் வெளிவந்து ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்து உள்ளது அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருந்தது. மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 480 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் முப்பத்தி இரண்டு கோடியை அள்ளி உள்ளது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 550 கோடி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் மட்டும் 250 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் 480 கோடி அள்ளி உள்ளதால் வருகின்ற நாட்களில் RRR படம் லாபத்தை அள்ளும் என கூறப்படுகிறது.