தமிழ் திரை உலகில் ஹிட்டடித்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தவர் பிரபாஸ்.
இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பாகுபலி முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும்மல்லாமல் வசூல் வேட்டையில் பல கோடிக்கு மேல் வசூல் ஆகி சாதனை படைத்தது.
மேலும் பிரபாஸ் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளிவருமா என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரபாஸின் பண்ணை வீட்டின் மதிப்பு எத்தனை கோடி என்பது இணையதளத்தில் கசிந்த வெளிவந்துள்ளது.
அதாவது பிரபாஸின் பண்ணை வீட்டில் பிரம்மாண்டமான தோட்டம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஒரு விளையாட்டு மைதானம் போன்ற பல வசதிகள் இருக்கிறதாம்.
இந்தப் பண்ணை வீட்டின் மதிப்பு 60 கோடி என தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் இந்த தகவல் பிரபாஸின் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.