“அண்ணாத்த” படம் இதுவரை தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி லாபத்தை பெற்றுக்கொடுத்து உள்ளது தெரியுமா.? வெளியான முழு தகவல்.

annathaa
annathaa

தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகராக  வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருவதால் ரசிகர்களும் மக்களும் இவரது திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்ப்பு கொடுக்கவில்லை.

இதை  உணர்ந்து கொண்டார் ரஜினி கிராமத்து கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் . இந்நிலையில் தான் சிறுத்தை சிவாவை கண்டுபிடித்தவர் ரஜினி அஜித்தை வைத்து தொடர்ந்து கிராமத்து படங்களை கொடுத்து வந்த சிவாவை வைத்து படம் பண்ணலாம் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அண்ணாத்த என்ற அண்ணன் தங்கை சென்டிமென்ட் படத்தை எடுத்து இருந்தார்.

இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது. இத்திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் வசூலில் மிகப்பெரிய அளவில் வேட்டை நடத்தி வருகிறது.

இரண்டு நாட்களில் 100 கோடியை அள்ளிய நிலையில் இதுவரை 150 கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்துள்ளது தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் 85 கோடியை அள்ளி உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அதன் காரணமாக வசூலில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது அண்ணாத்த ஆனால் இதுவரை அண்ணாத்த திரைப்படம்.

தயாரிப்பாளர் குழுவிற்கு மட்டும் சுமார் 17 கோடி இலாபத்தை கொடுத்துள்ளதாம். இதுமட்டுமல்லாமல் இனி வருகின்ற நாட்களில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி இன்னும் பல கோடிகளை பார்க்க இருக்கிறது தயாரிப்பாளர் குழு. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.